தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகர்(45). இவரது மனைவி ஜெயந்தி(43). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் விருதுநகர் அருகே ஆணைக்கூட்டம் அருகே பட்டாசு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை ஆமத்தூர் போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி சாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் ஞானசேகர்(45). இவரது மனைவி ஜெயந்தி(43). இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் விருதுநகர் அருகே ஆணைக்கூட்டம் அருகே பட்டாசு ஆலை நடத்தி வருகின்றனர். இந்த ஆலையை நிர்வகிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. இதனால் கணவரை பிரிந்து ஜெயந்தி தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் வீட்டில் இருந்து ஆலைக்கு புறப்படும் போது கணவர்  வழிமறித்து தாக்கியுள்ளார். இது தொடர்பாக சிவகாசி காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து வழக்கம் போல் ஆணைக்கூட்டத்தில் பட்டாசு ஆலையில் புதன்கிழமை பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு வந்த ஞானசேகர் கண்ணத்தில் அறைந்துள்ளார். அதோடு, என்மேல் கொடுத்த புகாரை திரும்ப பெறவிட்டால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து உடனே ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT