தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பலி

காஞ்சிபுரம் அருகே சின்னையன் சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ராஜவேல்

காஞ்சிபுரம் அருகே சின்னையன் சத்திரம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இன்று 3 வது சனிக்கிழமை என்பதால், காஞ்சிபுரத்தில் இருந்து நீர்வள்ளூர் கிராமத்துக்கு சாமி கும்பிட பாபு (35) என்பவர் தன் மனைவி பாரதி (30) குழந்தை ஜீவானந்தம் (ஒன்றரை வயது) மற்றும் ஒன்றரை மாத கைக்குழந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பின்னால் சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, இவரது வாகனத்துடன் மோதியதில், ஒன்றரை மாதக் குழந்தையைத் தவிர மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார் கூந்தல்... ஸ்ரீநிதி ஷெட்டி!

கூலி வெற்றிபெற ரஜினி போஸ்டர்களுடன் திருச்சி விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு!

கீர்த்தி பாண்டியனின் அஃகேனம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

காவல்துறை குவிப்பு! போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!! மீண்டும் பேச்சுவார்த்தை?

ராணுவப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT