தற்போதைய செய்திகள்

மன்னார்குடியில் நகை கடையில் 35 பவுன் திருடிய வழக்கில் ரயில்வே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் நகை விற்பனை செய்ய வந்த இடத்தில் கடை உரிமையாளருக்கு தெரியாமல் 35 பவுன் நகையை திருடிச் சென்ற வழக்கில் ரயில்வே காவல் சிறப்பு உதவியாளரை போலீஸார்

சிவா

திருவாரூர் மாவட்டம்,மன்னார்குடியில் நகை விற்பனை செய்ய வந்த இடத்தில் கடை உரிமையாளருக்கு தெரியாமல் 35 பவுன் நகையை திருடிச் சென்ற வழக்கில் ரயில்வே காவல் சிறப்பு உதவியாளரை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்யபட்டதுடன் திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

பெரியகம்மாளத்தெருவில் நகை மற்றும் அடகு கடை வைத்திருப்பவர் ஹீராசந்த் மகன் தினேஷ்குமார்.கடந்த 18.1.2014-ல் இவரது கடைக்கு வந்த இரண்டு பேர்.தங்கள் கொண்டு வந்த நகையை விற்பனைக்கு எடுத்துக்கொண்டு பணம் தருமாறு கூறினராம்.தினேஷ்குமார் அவர்களிடம் நகையை வாங்கி மதிப்பீடு செய்து விட்டு அதற்குறிய தொகையை பணப் பெட்டி இருக்கும் அறைக்கு சென்று எடுத்து வந்து பணத்தை தந்து விட்டு அந்த நபர்கள் சென்ற பிறகு மேஜை மீது பார்த்த போது அதில் துணிப் பையில் சுருட்டி வைத்திருந்த தலா 7 பவுன் சங்கிலிகள் 5 காணாமல் போயிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் அதில் பதிவான காட்சிகளை பார்த்த போது அடகு வைக்க வந்த அந்த இரண்டு பேரும், தினேஷ்குமார் கடையின் உள் அறைக்குள் செல்லும்  நேரத்தில் மேஜை மீது இருக்கும் துணிப் பையை திறந்து பார்த்து அதில் நகையிருப்பது தெரிந்து கொண்டு அதனை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளவது பதிவாகியிருந்தது.

இது குறித்து மன்னார்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நகை விற்பனைக்கு வந்தவர்கள் அளித்த முகவரி போலியானது என தெரிய வந்ததுடன்,கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை பதிவிறக்கம் செய்து போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதில் தஞ்சை மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம்,ஒக்கநாடுகீ ழையூரை சேர்ந்த பெருமாள் மகன் தஞ்சை ரயில்வே காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றும் கோவிந்தராஜ்(56). அதே ஊரை சேர்ந்த வள்ளுவர் தெரு,செல்வராஜ் மகன் அய்யாதுரை என்ற சிவக்குமார்(30).ஆகிய 2 பேரும் நகை திருட்டில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து தனிப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை கோவிந்தராஜை விசாரணைக்காக மன்னார்குடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் அவரிடமிருந்து 32 பவுன் நகையை மீட்டனர். இன்று கோவிந்தராஜை மன்னார்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் நீதிபதி பன்னீர்செல்வம் முன் ஆஜர் படுத்தியதுடன்,பறிமுதல் செய்யப்பட்ட நகைகளையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இவ் வழக்கில் தொடர்புடைய அய்யாதுரை என்ற சிவக்குமார் கூலி வேலைக்காக கேரளா மாநிலத்திற்கு சென்றுயிருபதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அவரை பிடிக்க தனிப்படை போலீஸார் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!!

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை எவ்வளவு?

மார்டல் காம்பட் 2 தமிழ் டிரைலர்!

நல்லகண்ணு மறைவு! தவெக தலைவர் விஜய் அஞ்சலி!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வளவு குறைந்தது?

SCROLL FOR NEXT