தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: 2 பேர் காயம்

சாத்தூர் அருகே உள்ள சேதுராமலிங்கம் பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடி மருந்து உராய்வின் காரணமக ஒரு அறையில் தீ பற்றியது

எம். ஆனந்த்குமார்

சாத்தூர் அருகே உள்ள சேதுராமலிங்கம் பகுதியில் ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் இன்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வெடி மருந்து உராய்வின் காரணமக ஒரு அறையில் தீ பற்றியது

இந்த தீ விபத்தில் விஜயகரிசல் குளத்தை சேர்ந்த அழகு மீன்ராஜ்(45) கோட்டையூரை சேர்ந்த தவசியம்மாள் (40) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து தவசியம்மாளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும்,, அழகு மீன்ராஜ் என்பவரை சிவகாசி அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்த தீ விபத்து குறித்து சாத்தூர் டிஎஸ்பி அறிவானந்தம் நேரில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT