தற்போதைய செய்திகள்

எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் நடிகை ரம்யா திடீர் சந்திப்பு: கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா திடீரென சந்தித்து கர்நாடக அரசியல்நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முத்துமணி

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை முன்னாள் எம்பியும் நடிகையுமான ரம்யா திடீரென சந்தித்து கர்நாடக அரசியல்நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

மண்டியா மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வெற்றிபெற்ற நடிகை ரம்யா, கடந்தாண்டு நடந்தமக்களவை தேர்தலில் அதேதொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதை தொடர்ந்து, லண்டன் சென்ற ரம்யா, அங்கு உயர்கல்வி பயின்று அண்மையில் கர்நாடகம் திரும்பினார். இதனிடையே, மண்டியா மாவட்டத்திற்கு சென்ற ரம்யா, அண்மையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் இல்லங்களுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்கூறி நிவாரண உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து, முதல்வர் சித்தராமையாவை சந்தித்து விவசாயிகள் தற்கொலை குறித்து விவாதம் நடத்தினர். புணேயில் மத்திய அரசின் திரைப்படக்கல்லூரியில் அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி போராட்டம் நடத்தியபோதும் அதில் பங்கேற்றார்.

இந்நிலையில், பெங்களூருவில் சனிக்கிழமை முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவை நடிகை ரம்யா திடீரென சந்தித்து பேசினார். கர்நாடக அரசியல் நிலவரம், விவசாயிகள்தற்கொலை, அரசியல் எதிர்காலம் குறித்து இருவரும் விவாதித்தாக கூறப்படுகிறது. ஒருமணி நேரம் நடந்த இந்த சந்திப்புகுறித்து நடிகை ரம்யா கூறியது: என்னுடைய கருத்துகளை எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் பகிர்ந்து கொள்வதுவழக்கம். அதன்படி அவரை சந்தித்து எனது உயர்கல்வி, விவசாயிகள்தற்கொலை, மாநில அரசியல் குறித்து பேசினேன். இனிமேல் தீவிர அரசியலில் ஈடுபடவிருக்கிறேன். கட்சி கொடுக்கும் பொறுப்புகளை செவ்வனே நிர்வகிப்பேன். நல்லகதை கிடைத்தால் சினிமாவிலும் நடிப்பேன் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT