தற்போதைய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் வட்டார நிர்வாகிகள் நியமனம் 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஒன்றிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாவட்ட தலைவர் எஸ்.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்கட்சியின் மாவட்ட தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உத்தரவின் படியும், முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பரிந்துரையின் பேரில் சிவகாசி ஒன்றியம் பிரிக்கப்பட்டு கிழக்கு வட்டாரம் உருவாக்கப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கிழக்கு வட்டார தலைவராக சித்தமநாயக்கன்பட்டி எம்.எம்.சீனிவாசன், மாவட்ட செயலாளராக காட்டுராஜா, வட்டார துணைத் தலைவர்களாக ரெங்கபாளையம் பொன்னுப்பாண்டி, தச்சகுடி பொன்னுச்சாமி, நெடுங்குளம் முருகேசன், வட்டார செயலாளர்களாக அங்கப்பன், ஈஸ்வரன், பாண்டி, இருளப்பன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT