தற்போதைய செய்திகள்

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக மாற்றுத்திறனாளி பெண் புகார்: 4 பேர் மீது வழக்கு 

விருதுநகரில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக கணவர் குடும்பத்தார் மீது மாற்றுத்திறனாளி பெண் வியாழக்கிழமை புகார் செய்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகரில் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக கணவர் குடும்பத்தார் மீது மாற்றுத்திறனாளி பெண் வியாழக்கிழமை புகார் செய்தார்.

விருதுநகர் அருகே குல்லூர்சந்தையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தமிழரசி(26). இவருக்கும், திருமங்கலம் அருகே உள்ள செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்த தவசிராஜனின் மகன் சதிஸ்குமாருக்கும் கடந்தாண்டு திருமணம் நடைபெற்றதாம்.

அப்போது, 6 சவரன் நகை மற்றும் சீர் வரிசை பொருள்களும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், திருமணம் ஆன நாளில் இருந்து எவ்வித வேலைக்கும் செல்லாமல்  சதிஸ்குமார் மது குடித்துவிட்டு தமிழரசியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.

மேலும், என்னுடன் சேர்ந்து வாழ 6 சவரன் நகையும், மேலும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் வாங்கி வர வேண்டும் எனக் கூறி சித்ரவதை செய்துள்ளனர். இதற்கு கணவர் குடும்பத்தினரும் உடந்தையாக இருந்தார்களாம். இதையடுத்து கோபித்துக் கொண்டு தந்தை வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இது தொடர்பாக விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளி தமிழரசி புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் சதிஸ்குமார், மாமனார் தவசிராஜன், மாமியார் செல்வி, கணவரின் சகோதரரி ராமூத்தாய் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT