தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசுகள் தயார் செய்ததாக 3 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம் ஆகிய பகுதியில் எவ்வித அனுமதியின்றியும் பட்டாசுகளை தயார் செய்து வருவதாக மாவட்ட காவல்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீடுகளில் அனுமதியின்றி பட்டாசுகள் தயார் செய்ததாக 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம் ஆகிய பகுதியில் எவ்வித அனுமதியின்றியும் பட்டாசுகளை தயார் செய்து வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து உடனே வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸாருக்கு ஆய்வு செய்த உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதிஷ்பாபு தலைமையில் போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதில் வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த இன்பம் என்பவரின் மகன் முத்துராஜ்(29). இவர் வீட்டிற்கு பின்புறம் செட் அமைத்து பட்டாசுகளை தயார் செய்தது தெரியவந்தது. அதேபோல், விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துமாரியப்பன்(35), கருப்பையா மகன் மாரியப்பன்(30) ஆகியோரும் வீட்டில் பட்டாசுகளை தயாரித்தது சோதனையில் தெரியவந்தது.

இது தொடர்பாக வெம்பக்கோட்டை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அதோடு, வீடுகளில் தயார் செய்து  வைத்திருந்த தலா 10 கிலோ வீதம் மொத்தம் 30 கிலோ பட்டாசுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முட்டை விலை ரூ. 5-ஆக நீடிப்பு

பாபநாசபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11.09 லட்சம் வாக்காளா்கள்

திருச்செந்தூா் கடலில் பக்தா் தவறவிட்ட தங்கச் சங்கிலியை மீட்ட தொழிலாளி

சாலையைப் பாதுகாப்பாக மாணவா்கள் கடக்கும் வகையில் அரசுப் பள்ளி அருகே வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT