தற்போதைய செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம்: 308 பேர் கைது

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை சங்கத்தைச் சேர்நத 308 பேரை

எஸ். பாண்டியன்

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளர்ச்சி துறை சங்கத்தைச் சேர்நத 308 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடந்த மறியல்  போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்து போராட்டம் குறித்து விளக்கி பேசினார். இதில், ஊரக வளர்ச்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கணினி உதவியாளர்களுக்கு நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை காவல் ஆய்வாளர் அன்னராஜ் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த 56 பெண்கள் உள்பட 308 பேரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும்! அதிமுகவின் 3-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!

என்டிஏ கூட்டணிக்கு சசிகலா, ஓபிஎஸ் வருவார்களா? - டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT