தற்போதைய செய்திகள்

வாணியம்பாடியில் பிளஸ் 1 மாணவன் விஷம் குடித்து தற்கொலை

வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ரூபன்(17). இவர் பொன்னேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

ராஜேஷ்

வாணியம்பாடி அடுத்த பெத்தவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ரூபன்(17). இவர் பொன்னேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பொங்கல் விழாவின் போது தனது நண்பர்களுடன் வெளியில் சென்றுவிட்டு மீண்டும் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வெங்கடேசன் தனது மகன் ரூபனை படிப்பில் கவனம் செலுத்தாமல் ஊர் சுற்றுவதை கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த ரூபன் வீட்டில் இருந்த பூச்சிமருந்து(விஷம்) குடித்தாரம். இதில் மயங்கிய நிலையில் இருந்த ரூபனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு ரூபன் இறந்தார். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலூகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் சுதேசி பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 05-10-2025

கம்பனின் தமிழமுதம் - 65: காற்றுக் கொந்தளிப்பில் விமானங்கள்!

தன்னை வியத்தலினால் கேடு

போரை நிறுத்திய புலவர்கள்!

SCROLL FOR NEXT