தற்போதைய செய்திகள்

மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலர் கணவர் கொலை: போலீஸார் தீவிர விசாரணை

மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் மர்மக்கும்பலால் புதன்கிழமை காலை வெட்டிக்கொல்லப்பட்டார். இதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர்

ஜெயப்பாண்டி

மதுரையில் அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் மர்மக்கும்பலால் புதன்கிழமை காலை வெட்டிக்கொல்லப்பட்டார். இதற்கு முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என போலீஸôர் சந்தேகிக்கின்றனர்.

 மதுரை வெங்கடாசலபுரம் 3 வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). மதுரை மாநகர் 77 வது வட்ட அதிமுகச் செயலராக கடந்த 7 ஆண்டுகளாக இருந்துவருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி. 77 வது வட்ட மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர்களுக்கு 3 மகன்கள், மகள் உள்ளனர்.

 ராஜேந்திரன் தினமும் காலையில் வெங்கடாசலபுரம் மார்க்கெட் பகுதியில் உள்ள டீக் கடைக்குச் செல்வது வழக்கம். புதன்கிழமை காலை அவர் டீக்கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் எதிர்ப்பகுதியில் இருந்த மற்றொரு கடையிலிருந்து வந்த 5 பேர் கும்பல் அவரைச் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியுள்ளது.

 கும்பலிடமிருந்து தப்பிக்க ராஜேந்திரன் ஓடியுள்ளார். ஆனால், கும்பல் அவரை சரமாரியாக வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். உடனே கும்பல் தப்பியோடிவிட்டது.

 பலத்த காயமடைந்த ராஜேந்திரனை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டார். சுப்பிரமணியபுரம் போலீஸôர் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

 கொலையுண்ட ராஜேந்திரனின் 2  மகன்கள் பொறியாளர்கள், கடைசி மகன் பட்டதாரி. மகள் பிளஸ் டூ படித்துள்ளார்.

 முன்விரோதம் காரணமா: வெங்கடாசலபுரம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரனின் உறவினரான அதிமுக பிரமுகர் மகன் செந்தில் என்பவர் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ராஜேந்திரனின் உறவினர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராஜேந்திரன் கொல்லப்பட்டதற்கு முன்விரோதமே காரணமாக இருக்கும் என போலீஸôர் சிலரைப் பிடித்து விசாரித்துவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT