தற்போதைய செய்திகள்

விருதுநகரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண்மைத்துறை செயற்பொறியாளர் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர்

எஸ். பாண்டியன்

வேளாண்மைத்துறை செயற்பொறியாளர் ரயில் முன் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ச.கண்ணன் தலைமை வகித்தார். இதில், திருநெல்வேலியில் வேளாண்மை பொறியியல் துறையில் தொகுப்பூதிய ஊதிய நியமனத்தில் பணம் பெற்றுத் தர முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிர்பந்தம் செய்ததால் செயற்பொறியாளர்(பொறுப்பு) முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.

இதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT