தற்போதைய செய்திகள்

இளைஞர் நீதிக்குழுமத்தில் தலைவர், உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நீதி(குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் 2006 விதிமுறையின் படி  அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கான சமூகப்பணி

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் இளைஞர் நீதி(குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்தப்பட்ட சட்டம் 2006 விதிமுறையின் படி  அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக்குழுமத்திற்கான சமூகப்பணி உறுப்பினர் மற்றும் குழந்தைகள் நலக்குழுத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியோரை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இது தொடர்பாக ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

இப்பிரிவில் இருந்து ஒரு பெண் உள்பட தலைவர், உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும். அதோடு, 35 வயதிற்கு மிகாமலும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் அவசியம் ஆகும். தற்போது, குழந்தைகள் நலக்குழுவில் சமூகப்பணி உறுப்பினராக உள்ளவர்களும், இரண்டாவது பணிக்காலத்திற்காக விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள். எனினும் ஒரு குழு மற்றும் குழுமத்தில் அதிகபட்சம் இருமுறை மட்டும் பதவி வகிக்க தகுதியுடைவர்களாவர்.

குழந்தைகள் நலக்குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர், இளைஞர் நீதிக்குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினராக நியமிக்கப்படுவர்கள் அங்கிகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குற்றவியல், உளவியல், சமூகவியல், சமூகப்பணி, பொருளாதாரம், மனையியல், கல்வி, அரசியல் அறிவியல், பெண்கள் சம்பந்தப்பட்ட பட்டம், ஊரக வளர்ச்சி சட்டம் மற்றும் மருத்துவம் போன்றவைகளில் பட்டம் பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கான படிவத்தை http:/www.tn.gov.in/deparments/30 என்ற இணையதளத்திலிருந்து பதவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்தோர்  மேற்குறிப்பிட்ட பதவிக்கான படிவத்தை பூர்த்தி செய்து ஆணையர், சமூக பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-600010 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் கிடைக்கும்மாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படை மூலம் நியமனம் செய்யப்படும். இது குறித்த தகவலை பெற 04562-252826 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT