தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டை பகுதியில் பெண்களை ஏமாற்றி ரூ.8.80 லட்சம் மோசடி செய்த சாமியார் மீது புகார்

விருதுநகர் அருகே மந்திர சக்தியால் பணம் பெற்றுத் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.8.80 லட்சம் மோசடி செய்து தலைமறைவான சாமியார் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டோர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மந்திர சக்தியால் பணம் பெற்றுத் தருவதாக கூறி பெண்களிடம் ரூ.8.80 லட்சம் மோசடி செய்து தலைமறைவான சாமியார் மீது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் செய்தனர். 

இது தொடர்பாக அருப்புக்கோட்டை பஜார் பகுதியைச் சேர்ந்த விஜயராணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரனிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

மேற்குறிப்பிட்ட பகுதியில் குடியிருந்து மாவு வியாபாரம் செய்து பிழைப்பு நடத்துகிறேன். எனது தோழி உஷாராணியின் மூலம் மேட்டமலையில் குடியிருந்து வரும் மந்திரவாதி எம்.சுப்பிரமணியன் குறித்து அறிந்தேன்.அவர் பழைய நிகழ்வுகளை எல்லாம் கூறுவதாகவும், மந்திர சக்தியால் பணம் வரவழைப்பதாகவும் கூறினாராம். தற்போது, அவரது மகன் உடல் நலமின்றி  அருப்புக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளார். அதனால் சாமியார், அவரது மனைவிக்கு மதிய உணவு தயார் செய்து தரும்படி கேட்டுக் கொண்டாராம். அவர்களின் சிரமத்தை அறிந்து தயார் செய்து கொடுத்தேன்.

இந்நிலையில் மேற்படி சாமியார் என்னிடமும், தோழி உஷாராணியின் முன்னிலையில் தனது மந்திரசக்தி மூலம் ரூ.1000 தாள் வரவழைத்து தலா ஒவ்வொன்று கொடுத்தார். எங்களின் குடும்ப நிலை கருதி அதிக பணம் வரவழைத்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதற்கு பூஜை செய்ய ரூ.1.80 லட்சம் சாமியார் கேட்டார். அப்போது பணம் இல்லாத நிலையில் நகையை அடகு வைத்து ரூ.1.80 லட்சத்தை எனது தோழி முன்னிலையில் மேட்டமலை சாமியாரிடம் கொடுத்தேன். அதை பெற்றுக் கொண்டு மீண்டும் 1 வாரத்திற்கு பின் வந்து பார்க்கும்படி கூறினார்.

பின்னர் குறிப்பிட்ட நாளில் சென்று பார்க்கையில் மேலும் ரூ.1.80 லட்சம் கேட்ட நிலையில் தர இயலாறு என்றாராம். அதற்கு சாமியார் இரண்டு மாதம் கழித்த பின்னர் தருவதாக அருள்வாக்கு கூறுவது போல் கூறினாராம். எனவே காலதாமதத்தை விரும்பாமல் தெரிந்தவர்களிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். இந்நிலையில் நீண்ட நாள்களாகியும் அவர் வரவில்லை. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சென்று விசாரணை செய்ததில் போலிச்சாமியார் என்பதும், பல பெண்களிடம் ரூ.6 லட்சம் வரையில் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுத்து பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாவட்ட எஸ்.பியிடம் நேரில் அளித்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT