விருதுநகர் அருகே அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற கருந்திரி கட்டுக்களை பறிமுதல் செய்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் அருகே சூலக்கரை-ஓன்டிப்புலிநாயக்கனூர் சாலையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த வாகனத்தில் பையில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. உடனே அதை கைப்பற்றி விசாரணை செய்ததில் சூலக்கரையைச் சேர்ந்த வேல்முருகன்(40) என்பது தெரியவந்தது. உடனே அவரிடம் இருந்த 20 கருந்திரி கட்டுக்களையும் போலீஸார் பறிமுதல் செய்ததோடு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.