தற்போதைய செய்திகள்

விருதுநகரில் ரயில்வே சிக்னல் கோளாறு காரணமாக கேட் அடைப்பு: மாணவிகள் பொதுமக்கள் அவதி

விருதுநகரில் ரயில் சிக்னலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேட் 50 நிமிடம் வரையில் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செவ்வாய்கிழமை காலையில்

எஸ். பாண்டியன்

விருதுநகரில் ரயில் சிக்னலில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேட் 50 நிமிடம் வரையில் அடைக்கப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் செவ்வாய்கிழமை காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல  முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் ரயில்களும் இடையிலேயே நிறுத்தப்பட்டன.

விருதுநகர் ரயில் நிலையத்திற்கு காலையில் வழக்கம் போல் நெல்லையிலிருந்து-ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் 8.10 மணிக்கு வந்து 8.15 மணிக்கு கடந்து செல்லும். அதேபோல், அதைத் தொடர்ந்து மைசூரிலிருந்து-தூத்துக்குடிக்குச் செல்லும் ரயில் 8.30 மணிக்கு வந்து 9 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் ரயில் செல்வதற்காக சிக்னல் விழுந்ததும் 8 மணிக்கு ராமமூர்த்தி சாலை, வாடியான் தெரு, தந்தி மரத்தெரு பகுதியில் உள்ள கேட்கள் அடைக்கப்பட்டன. மேலும், காலை நேரம் என்பதால் அவவழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு காரியங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் ஆகியோரின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கிழக்கு, மேற்கு பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலையில் அனைவரும் தவித்தனர்.

இந்நிலையில், ரயில்வே நிலையத்தில் ரயில் செல்வதற்கான சிக்னலில் தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் அல்லம்பட்டி கௌசிகா ஆற்றுப்பாலத்தில் நெல்லை-ஈரோடு எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டிருந்தது. அதேபோல், ரயில் நிலையத்தில் மைசூர்-தூத்துக்குடி விரைவு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே சுமார் 8.50 மணி வரையில் மூன்று ரயில்வே கேட்களும் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் 8.15 மணிக்கு செல்ல வேண்டிய நெல்லை-ஈரோடு பயணிகள் ரயில் சிக்னல் கிடைத்ததும் 8.45 மணிக்கு சுமார் அரைமணிநேரம் தாமதமாகவே புறப்பட்டுச் சென்றது. அதைத் தொடர்ந்து மைசூர்-தூத்துக்குடி குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்பட்டுச் சென்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படாத வகையில் நடவடிக்கை

SCROLL FOR NEXT