திருச்சி மாவட்டத்தில் துவாகூடியில் தேவாராயநேரி பகுதியை சேர்ந்தவர் ரவி. அவரது மகன் சரவணன் (23). கடந்த 23-ம் தேதி துவாகூடியில் செல்லும் போது மோட்டர் சைக்கிள் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து 2 மருத்துவமனையில் சிசிக்சை அளிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 25-ம் மூளைச்சாவு அடைந்தார்.
இதைதொடர்ந்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சரவணனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததை தொடர்ந்து திருச்சி சித்தார் மருத்துவமனையில் சனிக்கிழமை பிற்பகல் இருதயம்,
சிறுநீரகம், இருதய வால்வுகள், கண்கள், கல்லீரல் ஆகிய 7 உறுப்புகள் தானாமாக பெறப்பட்டது. இதில், இருதயம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறுநீரகம் திருச்சி மற்றும் மதுரையில் உள்ள மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் கல்லீரல் திருச்சி மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது. இதற்காக, மருத்துவமனையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு 10 நிமிடத்திற்கு இருதயம் கொண்டு செல்வதற்காக மாநகர காவல்துறை பாதுகாப்பு செய்யப்பட்டு ஆங்காங்கே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. தனி விமானம் மூலம் இருதயம் 1 மணி நேரத்திற்குள் ஹைதராபாத் கொண்டுச் செல்லப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.