தற்போதைய செய்திகள்

போலீஸ் டி.ஜி.பி. அலுவலக ஊழியர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலக ஊழியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

ராஜவேல்

காஞ்சிபுரம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலக ஊழியர் வீட்டில் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் தேனம்பாக்கம் வரதராஜநகரைச் சேர்ந்தவர் குருசாமி. தலைமைக் காவலரான இவர் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி சுஜாதா (51). இவர் சென்னை டி.ஜி.பி. போலீஸ் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சுஜாதா கடந்த 2 நாள்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் வெளியே உள்ள ஒரு இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றாராம்.

பின்பு வீட்டிற்கு வந்தார். சாவியை எடுத்து திறந்து உள்ளே சென்றார். அங்கு மேஜையில் வைத்திருந்த 3 பவுன் தங்க வளையல் 2, 5 பவுன் தாலி சரடு 1, முக்கால் பவுன் மோதிரம் 2, 1 பவுன் கம்பல் 1 செட், காது மாட்டல் அரை பவுன், 3 பவுன் டாலர் செயின், 3 பவுன் கை செயின் உள்பட 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து சுஜாதா காஞ்சிபுரம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காஞ்சிபுரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மேற்பார்வையில், கிராமிய காவல் ஆய்வாளர் சாரதி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT