தற்போதைய செய்திகள்

விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயிலில் நாளை வெள்ளி தேர் வெள்ளோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை(பிப்,7) நடைபெறுகிறது.

உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி மலைக்கோயிலில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை(பிப்,7) நடைபெறுகிறது.

கோயில் உள்பிரகாரத்தை சுற்றி வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த  வெள்ளித்தேர் பணிக்காக உபயதாரர்கள் மற்றும் விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான சி. விஜயபாஸ்கரிடம் இருந்து சுமார் 180 கிலோ வெள்ளி காணிக்கையாகப் பெறப்பட்டது.

சுமார் 8 அடி உயரம், 5 அடி அகலத்தில் தேக்கு உள்ளிட்ட மரங்களில் ஆகமவிதிகளின்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிதகடு பதிக்கும் பணி கடந்த அக்,(16. 10. 2015) மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பணி முழுவதும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வரும் நாட்களில் பக்தர்கள் காணிக்கை தொகையை கோயிலில் செலுத்தி வெள்ளித்தேரை இழுத்து சாமி வழிபாடு நடத்தலாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர் பல்லாயிரக்கணக்காணோர் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரனூர் காவல் துணைகண்காணிப்பாளர் எம். தமிழ்ச்செல்வன் தலைமையில் போலிஸார் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT