முகப்பு
தற்போதைய செய்திகள்

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே அகலப்பாதை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே அகலப்பாதை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிóததுள்ளது.

Updated On : 8 மார்ச் 2016, 9:58 am IST
பகிர்:

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே அகலப்பாதை அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிóததுள்ளது.

இது குறித்து திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூர் - திருவலங்காடு இடையே நான்காவது அகலப்பாதை பணிகள் முடிவடைந்ததையடுத்து அதிவேக ரயில் சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

இந்த ரயில் சோதனை ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சதீஷ் குமார் மிட்டல் மேற்கொள்ளவுள்ளார். இந்த அதிவேக ரயில் சோதனை ஓட்டம் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

எனவே அந்த நேரத்தில் அதிவேக சோதனை ஓட்டட் நடைபெறும் பகுதியில் பொது மக்கள் யாரும் அத்துமீறி நுழைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.