தற்போதைய செய்திகள்

ஹெச்டிஎப்சி வங்கியின் நிகர லாபம் 20% உயர்வு

DIN

​தனியார் துறையை சேர்ந்த ஹெச்டிஎப்சி வங்கி, அதன் செப்டம்பர் காலாண்டின் முடிவில் நிகர லாபம் 20% உயர்வுடன் உள்ளதாகக் கூறியுள்ளது.

நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎப்சி வங்கி, கடந்த ஜூலை தொடங்கி, செப்டம்பர் வரையான காலாண்டுச் செயல்பாடுகள் தொடர்பான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி செப்டம்பர் காலாண்டில், திரட்டப்பட்ட டெபாசிட்களின் மதிப்பு 17% வளர்ச்சியுடன், ரூ.5,91,731 கோடியாக உள்ளது. வழங்கப்பட்ட கடன்தொகையின் மதிப்பு 18.1% அதிகரித்து ரூ.4,94,418 கோடி என்றும், நிகர லாபம் 20% உயர்ந்து, ரூ.3,455 கோடியாக உள்ளதாகவும் கூறியுள்ளது.

வங்கியின் நிகர வட்டி வருமானம் 19.7% அதிகரித்து, ரூ.7,994 கோடியாகவும், நிகர வருமானம் 18% உயர்வுடன் ரூ.9,233 கோடியாகவும் உள்ளதென்று, ஹெச்டிஎப்சி வங்கி குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT