தற்போதைய செய்திகள்

சுரங்க முறைகேடு வழக்கு: எடியூரப்பா உள்ளிட்ட 4 பேர் விடுவிப்பு

DIN

பெங்களூரு : கர்நாடகாவில் நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட 4 பேரை தில்லி சிபிஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது.
பெல்லாரி பகுதியில் நடந்த நிலக்கரி சுரங்க ஒப்பந்த விவகாரத்தில் ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதில், எடியூரப்பா முதல்வராக இருந்த போது தனது செல்வாக்கை பயன்படுத்தி ரெட்டி சகோதரர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு நிலக்கரி ஒப்பந்தத்தை வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், எடியூரப்பா உள்ளிட்ட 4 பேரையும் சுரங்க முறைகேடு வழக்கில் இருந்து வழக்கில் இருந்து விடுவித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எடியூரப்பா தனது முதல்வர் பதவியை இழக்க காரணமாக இருந்து நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT