தற்போதைய செய்திகள்

விரைவில் வீடு திரும்புவார் ஜெயலலிதா: மருத்துவமனை நிர்வாகம்

தினமணி

சென்னை: முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
 முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல், நீர்ச்சத்து இழப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.
 மருத்துவ நிபுணர்கள் தொடர் சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளார். வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் தொடர்ந்து 3-ஆவது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் முதல்வருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் குழுவினர் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.
 சசிகலா, இளவரசி ஆகியோர் மருத்துவமனையில் உடன் இருக்கின்றனர்.
 சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோர் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கவனித்து வருகின்றனர்.
முதல்வரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT