பயணிகள் ரயில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு
பயணிகளின் ரயில்களில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பயணிகளின் ரயில்களில் டிக்கெட் விலையை அதிகரிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -
ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய ரயில்களில் டிக்கெட் விலைகளில் பத்து சதவிகிதம் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பத்து சதவிகித டிக்கெட்டுகளுக்கு பிறகு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கூடுதலாக பத்து சதவிகித கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம் ரயில் கட்டணங்கள் விமான கட்டணங்களுக்கு இணையாக வசூலிக்கப்படும். தட்கல் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு தற்போதுள்ள முறையே கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு நாளை மறுதினம் அமலாகவுள்ள நிலையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்களின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.