தற்போதைய செய்திகள்

அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்

DIN

புதுதில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2016 -17 ல் 7.1 சதவீதமாக ஆக இருந்தது. இது ஜி.எஸ்.டி மசோதா மற்றும் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளால் மெதுவாக வளர்ந்து நடப்பு நிதி ஆண்டில் 7.4 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2018ம் ஆண்டில் 7.6 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது.  அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். மேலும் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் மாற்றம் ஏதுமின்றி, 6.25% என்ற முந்தைய அளவிலேயே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்

அதேசமயம், ரிவர்ஸ் ரெப்போ வட்டிவிகிதம் 6% ஆக அதிகரிப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார சூழல் இயல்பான நிலையில் உள்ளபோதிலும், மொத்த விலை பணவீக்கம் அதிகரித்தபடி உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம், இதர பொருளாதார நடவடிக்கைகள் எதிர்பார்த்தபடி உள்ளதாக, ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

மக்களவைத் தேர்தலில் பாஜக கனவு பலிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

400 தொகுதிகளில் வெல்லாதது வருத்தம்: பாஜக

காங்கிரஸ் வியூகம் என்ன? நாளை தெரியும் என்கிறார் ராகுல்

தேர்தல் முடிவு இப்படியிருக்கும் என கற்பனைகூட செய்யவில்லை: ஜெகன்மோகன்

SCROLL FOR NEXT