தற்போதைய செய்திகள்

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவில் நிலநடுக்கம்

DIN

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அடுத்து சுமார் 40 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் இங்குள்ள மக்கள் கடும் பீதியடைந்தனர். 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. தலைநகர் மணிலாவிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரம் தெற்கே உள்ள டலாகா என்ற இடத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டின் தலைநகரான மெட்ரோ மணிலா, லகுனா, ரிஸால், கவிட்டே, ஸம்பேல்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.  

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பொருள் சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியாகவுல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்றிரவு இதே பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும் அதை தொடர்ந்து சுமார் நாற்பது முறை அடுத்தடுத்து நில அதிர்வுகளும் ஏற்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT