தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு விலகிற்கான அவசர சட்ட வரைவு: அமைச்சர் விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் இன்று இரவு தில்லி பயணம்

DIN

சென்னை:  நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்ததையடுத்து  முதல்வர் பழனிசாமியுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க ஒத்துழைப்பு தரப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.

நாளை காலை உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்த அவசர சட்ட வரைவு சமர்பிக்கப்படும் என்றும்  நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு என்ற அறிவிப்பு, மாநில அரசின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் கூறினார்.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் இன்று இரவு தில்லி செல்கின்றனர். அவசர சட்ட வரைவுக்கு நாளை மாலை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் என தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT