தற்போதைய செய்திகள்

எப்பாடு பட்டாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும்: ராஜேந்தர்

DIN

சென்னை

தமிழ் மக்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.  

தமிழகத்திலும், மகாராஷ்டிரத்திலும் ஜல்லிக்கட்டு, எருதுப் போட்டிகள் மூலமாக விலங்குகளை காட்சிப்படுத்துவதாக பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் இந்த போட்டிகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தடை உத்தரவை விலக்கி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மாணவர்கள் உட்பட பலவேறு அமைப்பினர்கள் சார்பில் போர் குரல்கள் ஒலிக்க தொடங்கின.

அந்த வகையில்  நாடாளுமன்றத்தில் உள்ள அதிமுக எம்.பி.க்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் என நடிகரும்  லட்சிய திமுக தலைவருமான ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது எப்பாடு பட்டாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT