தற்போதைய செய்திகள்

கைலாச மானசரோவர் யாத்ரீகர்களின் பயணம் ரத்து:  காரணத்தை தெளிவுபடுத்தவில்லை சீனா

DIN

பெய்ஜிங்:  இந்தியாவில் இருந்து கைலாச மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ள பக்தர்களின் முதல் குழுவில் இடம்பெற்றுள்ள 47 பேரை திபெத்துக்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது.  

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் அமைந்துள்ள கைலாச மலைக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். அப்போது அங்குள்ள மானசரோவர் ஏரிக்கும் அவர்கள் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், கைலாச மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய ஆன்மிக பயணிகள் 47 பேர் கடந்த 19–ந்தேதி சீன எல்லையை கடந்து செல்ல இருந்தனர். ஆனால் அவர்களை மேற்கொண்டு பயணத்தை தொடர விடாமல் சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்பி விட்டனர்.

மழையினாலும், நிலச்சரிவுகளாலும் சாலைகள் மிகவும் பழுது அடைந்து இருப்பதால்தான், இந்திய ஆன்மிக பயணிகளை தடுத்து நிறுத்தி விட்டதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களும் தொடர்பில் இருப்பதாகவும், சிக்கிம் மாநிலம் நாது லா பாஸ் வழியாக கைலாச மானசரோவர் புனித யாத்ரீகர்களை அனுமதிக்க இந்தியாவுடன் பேசி வருவதாகவும், சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியுள்ளார். ஆனால் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணத்தை தெளிவுபடுத்தவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT