தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்களை சர்ச்சைக்குரியதாக்க எதிர்க்கட்சிகள் முயல வேண்டாம்: வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

DIN

ஹைதரபாத்:  குடியரசுத் தலைவர் தேர்தலை கொள்கை ரீதியில் அணுக வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளுக்கு பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது காங்கிரசும் இடதுசாரி கட்சிகளும் துரதிருஷ்டவசமாக குடியரசுத் தலைவர் தேர்தல்களை ஒரு சர்ச்சைக்குரியதாக ஆக்க முயற்சிக்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று.  நாடு 42 ஆவது நெருக்கடி நிலை தினத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் போது அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்ளும் குடியரசுத்தலைவர் ஒருவரே நாட்டிற்கு தேவை. 

எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்படும் ஒருவரே குடியரசுத் தலைவர் பதவிக்கு வரவேண்டும். அதுபோன்ற ஒருவரையே குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிறுத்தியுள்ளது என்று வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

SCROLL FOR NEXT