தற்போதைய செய்திகள்

நீட் தேர்வு இடஒதுக்கீடுக்கு எதிரானது: கனிமொழி

DIN

சென்னை: மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்துவது இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானது என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக மருத்துவர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை. உலகம் முழுவதும் தமிழக மருத்துவர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். நீட் தேர்வு இடஒதுக்கீடுக்கு எதிரானது. திராவிட இயக்கங்கள் போராடி கொண்டு வந்த சமூக நீதிக்கு எதிரானது.

தமிழகத்தில் சிறந்த மருத்துவ மாணவர்களை உருவாக்கக் கூடிய சிறந்த மருத்துவ கல்லூரிகள் எத்தனையோ உள்ளன. இது போன்ற மருத்துவக் கல்லூரிகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றும் மருத்துவ மாணவர்கள் பட்ட மேற்படிப்புக்கு இட ஒதுக்கீடு போராட்டம் நடத்துவது நியாயமானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT