தற்போதைய செய்திகள்

தெற்கு காஷ்மீரில் பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!

தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி (பிஎன்பி) பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து

DIN

ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி (பிஎன்பி) பணத்துடன் ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள புல்வாமா நகரில் பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. அந்த ஏ.டி.எம் மையத்துக்கு பாதுகாவலர்கள் இல்லாததால் நேற்று சனிக்கிழமை பின்னிரவு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பணத்துடன் இருந்த ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்துவந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர். மேலும் விசாரணைக்காக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளை ஆய்வு நடத்தி வருகின்றனர். 

நகரின் மையப்பகுதியில் பிஎன்பி வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு!

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

SCROLL FOR NEXT