தற்போதைய செய்திகள்

வேதா இல்லம் ஒரு கோயில்; அங்கு சோதனை என்பது வேதனை அளிக்கிறது: மைத்ரேயன் எம்.பி.

DIN

சென்னை: காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் நடந்த சோதனை வேதனை அளிப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைத்ரேயன் தனது முகநூல் பக்கத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று இரவு 9.30 மணி அளவில் தொடங்கிய சோதனை 4 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து நிறைவு பெற்றது. 

வருமானவரித் துறைகளின் அதிரடி சோதனை அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் முகநூல் பக்கத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்துள்ளதாவது: காரணம் எதுவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சோதனை என்பது மனவேதனை அளிக்கிறது.

என்னைப் பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை கோயிலாக கருதுகிறேன் என முகநூல் பக்கத்தில் மைத்ரேயன் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT