தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு 

DIN

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ஷியா முஸ்லிம் பிரிவினர் குறிவைத்து கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சியா இனத்தவர் வழிபட்டுவரும் இமாம் இ சாமன் எனப்படும் மசூதியில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு வந்த ஒருவர் அதை வெடிக்கச் செய்ததில் 39 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 45பேர் காயமடைந்தனர்.

இதேபோல் கோர் மாகாணத்தில் கோஜா கான் என்னுமிடத்தில் சன்னி இனத்தவரின் மசூதியில் நிகழ்ந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலிகளில் தற்போது வரை 72 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சன்னி பிரிவைச் சார்ந்த இஸ்லாமியர்களைக் குறிவைத்து ஷியா பிரிவு ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT