தற்போதைய செய்திகள்

சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: ஹெச்.ராஜா

DIN

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குனர் பி.மணியும் போட்டியிட்டனர்.

வாக்குப்பதிவு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணியளவில் நிறைவடைந்தது. ஹெச்.ராஜா 52 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் தன் தோல்வி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹெச்.ராஜா. இந்த தேர்தல் செல்லாது. 23ம் தேதி நடைபெற வேண்டிய தேர்தலை முன்கூட்டியே நடத்தியுள்ளனர். வேறு சில தேர்வுகள் காரணமாக பலரும் இன்று வாக்களிக்க வர முடியாது என்பதை அறிந்தே இவ்வாறு செய்துள்ளனர். எனவே தேர்தல் செல்லாது என கூறினோம்.

அதை ஏற்க மறுத்து தேர்தல் நடந்துள்ளது. தேசிய சாரணியர் அமைப்பு இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும். எனவே நான் வழக்கு தொடர தேவையில்லை. இந்த தேர்தல் செல்லாது சாரண சாரணியர் அமைப்பில் உள்ள முறைகேடுகளை தடுக்க தொடர்ந்து போராடுவேன்  என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT