முகப்பு
தற்போதைய செய்திகள்

சந்திரயான் -2 திட்டம் ஒத்திவைப்பு இஸ்ரோ தலைவர் கே. சிவன்

எதிர்வரும் சந்தராயன் – 2 நிலவுப்பயணம் குறித்த விவரங்களை இஸ்ரோ தலைவர், இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் எடுத்துரைத்தார். 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:50 pm IST
பகிர்:

எதிர்வரும் சந்தராயன் – 2 நிலவுப்பயணம் குறித்த விவரங்களை இஸ்ரோ தலைவர், இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம் எடுத்துரைத்தார். 

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரோவின் தலைவரும் விண்வெளித்துறைச் செயலாளருமான டாக்டர் கே. சிவன் இன்று (18.04.2018) புது தில்லியில் அணுசக்தி மற்றும்  விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்கைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதவாக்கில் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நிலவு நோக்கிச் செலுத்தப்படவுள்ள சந்தராயன்-2 குறித்து டாக்டர் கே. சிவன் அமைச்சரிடம் விளக்கினார்.

முன்னதாக சந்திரயான் -2 விண்ணில் செலுத்த இந்த மாதத்திற்கு திட்டமிடப்பட்டிந்தது. இந்நிலையில் அதை  இந்த ஆண்டின் பிற்பகுதிக்கு மாற்றியமைத்துள்ளதோடு, சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்படும் முன் அதை மறு ஆய்வு செய்ய.  தேசிய அளவிலான குழு ஒன்று அமைத்து சில கூடுதல் சோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

திட்ட விவரங்களை விளக்கிய டாக்டர் சிவன் சந்தராயன் – 2 திட்டம் மொத்தம் ரூ.800 கோடி செலவு பிடிக்கும் என்றும் இதில் ரூ.200 கோடி ஏவும் செலவினம் என்றும் ரூ.600 கோடி செயற்கை கோள் செலவினம் என்றும் கூறினார். 

இதே சந்தராயன் – 2 கலத்தை வெளிநாட்டிலிருந்து விண்ணில் செலுத்துவதாக இருந்தால் அதற்கு ரூ.1500 கோடி செலவாகும். இந்தச் செலவில் பாதி அளவில் சந்திராயன் ஏவப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.