தற்போதைய செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மருத்துவமனையில் அனுமதி

ANI

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (93). இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71), அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர். பார்பரா புஷ் கடந்த செவ்வாய்கிழமை (ஏப் 17) காலமானார். அவரது மறைவுக்கு பின், முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச்.டபுல்யூ. புஷ் உடல்நலக்குறைவு காரணமாக ஹூஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புஷ் நேற்று காலை ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தகுந்து சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர். தற்போது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

நீட் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 9,141 போ் எழுதினா்

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

SCROLL FOR NEXT