தற்போதைய செய்திகள்

நாளை நடைபெறவிருந்த மின்சார வாரிய ஊழியர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

DIN

நாளை நடைபெறவிருந்த மின்சார வாரிய ஊழியர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மின்வாரிய ஊழியர்களுக்கு 1.1.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவுடன் தொழிற்சங்கங்கள் 4 கட்டமாக ஏற்கெனவே பேச்சு நடத்தின. 

இதில், நிலுவைத் தொகையோடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் காண வேண்டும். களப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் வேலைப்பளு அதிகரிப்பதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பெருந்திரள் தர்ணா, காத்திருப்பு போராட்டம் என தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு நடத்தி வருகிறது. இருப்பினும், 27 மாதங்கள் கடந்தும் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 72 ஆயிரம் நிரந்தரத் தொழிலாளர்கள், 10 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள், 6 ஆயிரம் பகுதி நேர ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை தேனாம்பேட்டைதொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் நாளை மறுநாள் வேலைநிறுத்தம் நடக்கும் என தொழிற்சங்கங்கள் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையில் நாளை மீண்டும் மின்சார வாரிய ஊழியர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த மின்சார வாரிய ஊழியர்கள் முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT