தற்போதைய செய்திகள்

73 சதவிகிதத்தினர் சொத்து ஒரு சதவிகிதத்தினர் கைகளுக்கு சென்றது குறித்து டாவோஸ் நகரில் கூறுங்கள்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்

DIN

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப்பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். 

அப்போது பேசிய அவர் உலகமயமாக்கல் என்ற கொள்கையால் பூவுலகமே சுருங்கி வருகிறது என்று பிரதமர் மோடி பேசினார். உலகமயமாக்கல் என்ற கொள்கை தன் கவர்ச்சியை இழந்து வருவதாக நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஏழ்மையும் வேலை வாய்ப்பு இல்லாமையுமே நாடுகள் எதிர்நோக்கும் பெரும் சவால் என்று தெரிவித்துள்ளார். 

ஏழை நாடுகளில் வளர்ந்த நாடுகள் செய்யும் முதலீடு குறைந்து கொண்டே போகிறது என்று தனது உரையில் குறிப்பிட்டார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்தியாவின் 73 சதவிகிதம் பேரின் சொத்துக்கள் 1 சதவிகிதத்தினர் கைகளில் இருப்பதாக வெளியான தகவல் தொடர்பாக உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேச வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “அன்புள்ள பிரதமருக்கு, சுவிச்சர்லாந்துக்கு வரவேற்கிறேன். தயவுசெய்து ஏன் 73 சதவிகிதத்தினர் சொத்து ஒரு சதவிகிதத்தினர் கைகளுக்கு சென்றது என டாவோஸ் நகரில் கூறுங்கள்”என்று பதிவிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT