தற்போதைய செய்திகள்

மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ் பிரான்ஸ் சென்றார்

DIN

பிரான்ஸ்: மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா ஸ்வராஜ் 4 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த பயணத்தின் முதல்கட்டமாக அவர் இத்தாலிக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். இதையடுத்து இத்தாலியில் இருந்து இன்று பிரான்ஸ் சென்றடைந்தார். அங்கு 18, 19ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் இருநாட்டு உறவுகள் குறித்து பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர், லக்சம்பர்க் நாட்டில் 19, 20ஆம் தேதிகளிலும், பெல்ஜியத்தில் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலும் சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம் செய்கிறார்.
தனது 4 நாடுகள் பயணத்தின்போது, அந்தந்த நாடுகளின் தலைவர்கள், வெளியுறவுத் துறை அமைச்சர்களை சந்தித்துப் பேச சுஷ்மா ஸ்வராஜ் திட்டமிட்டுள்ளார்.

பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கரையும், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தாஜனியையும் சுஷ்மா சந்தித்து பேசவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT