தற்போதைய செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் ரூ.3,866 கோடி மதிப்பில் புதிய நீர்ப்பாசன திட்டம்: தொடங்கி வைத்தார் பிரதமர்

DIN

பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் ராம்கர் மாவட்டத்தில் மோகன்பூரா நீர்ப்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார்.  இத்திட்டத்தின் கீழ் 3,866 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் அணை, மற்றும் கால்வாய் ஆகியவை, மாநிலத்தின் 727 கிராமங்களுக்கு பயனளிக்கும். 

இந்த புதிய திட்டத்தின் துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம் என குற்றம் சாட்டினார், மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த முனைப்பு காட்டு முதல்வர் சிவராஜ் சிங் சௌஹானை பாராட்டினார். 

அதேசமயம் ஏழைகளின் நலனக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. பா.ஜ.க அரசை மக்கள் நம்புகிறார்கள். பொய்கள், குழப்பம், அவநம்பிக்கை ஆகியவை விலகியுள்ளன "என்று மோடி கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியிலும் 13  ஆண்டுகளாக மாநிலத்திலும் ஏழை, விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பின்தங்கிய பகுதிகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு பா.ஜ.க பாடுபடுகிறது என்று பிரதமர் கூறினார். a

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT