தற்போதைய செய்திகள்

பொள்ளாச்சி அருகே வேன் கவிழ்ந்து 5 பேர் பலி: 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

DIN


கேவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வால்பாறை சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மலைவாழ் மக்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் உட்கோட்டம், தளி காவல் நிலைய சரகம் குருமலை, குழிப்பட்டி மற்றும் மாவடப்பு ஆகிய மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர்கள் 17 பேர் நேற்று மாலை தாங்கள் சேமித்த சிறுகாட்டு பொருட்களை விற்பனை செய்வதற்கு உடுமலை வந்துவிட்டு திரும்ப தங்களது ஊருக்கு திரும்பி உள்ளனர். 

குழிப்பட்டி ராஜன் என்பவருக்கு சொந்தமான வேனில் இரவு 11:00 மணியளவில் கோவை மாவட்டம் காடம்பாறை காவல் நிலைய சரகம் மரப்பாலம் அருகே உள்ள வளைவில் வந்த போது வாகனம் விபத்திற்குள்ளாகி பயணம் செய்த குருமலையை சேர்ந்த ஒரு பெண் மற்றும் 4 ஆண்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 

காயமடைந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள் கோவை அரசு மருத்துவமனையிலும், 3 ஆண்கள், 6 பெண்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மினி லாரியின் ஓட்டுநர் ராஜனுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மலைகிராமங்களில் உரிய போக்குவரத்து வசதி இல்லாததால், கிராமப்புற மக்கள் மினிவேன்களில் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வரும்போதுதான் இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்பு நேரிடுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

சந்திரசேகர் ராவ் பிரசாரத்தில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் தடை!

பூர்ணிமை..!

SCROLL FOR NEXT