தற்போதைய செய்திகள்

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டம்

DIN


விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவமனைக்குள் புகுந்து காவலாளிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை, விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவு குடி போதையில் நோயாளியை பார்க்க வந்த நபரை மருத்துவமனைக்குள் அனுமதிக்க பாதுகாவலர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மற்றும் உடன் வந்த 5 பேர் பாதுகாவலர் மற்றும் செவிலியரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.  

இதனை கண்டித்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க கோரி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT