தற்போதைய செய்திகள்

விக்டோரியா ஏரியில் படகு விபத்து: பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

DIN


நைரோபி: தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது.

உகாரா மற்றும் உகெரேவே தீவுகளுக்கு இடையே எம்வி நைரேரி என்ற படகு 200-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு விக்டோரியா ஏரியில் சென்று கொண்டிருந்தது. இந்தப் படகு வியாழக்கிழமை உகாரா தீவுப் பகுதியை நெருங்கும் போது திடீரென ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், என்ஜின் அறையில் இருந்த ஒரு பொறியாளர் உள்பட 40 பேர் உயிர் தப்பினர். மற்றவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினா் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.   

இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சா் ஐசக் காம்வெல்வே கூறுகையில், விக்டோரியா ஏரியில் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவா்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதில், 172 பேரின் சடலங்கள் உறறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

 மீட்பு குழுவினா் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா். 

இருப்பினும், விபத்து நடந்து மூன்று நாள்கள் கடந்துவிட்டதால் பயணிகள் இனி உயிருடன் மீட்கப்படும் வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளதாக தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT