தற்போதைய செய்திகள்

மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக புதிய ஆய்வுக்கூடத்தை வடிவமைத்த கல்லூரி

DIN

ஹைதராபாத்தில் உள்ள பிரபல மஹேந்திரா எகோல் சென்ட்ரல் பொறியியல் கல்லூரியில் புதிதாக எலக்ட்ரிகல் வெஹிகில் டெக்னாலஜி (EVT) என்ற ஆய்வுக் கூடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக துவங்கியுள்ளனர்.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசைக் குறைக்கும் விதமாக வருங்காலங்களில் வாகனங்கள்  அனைத்தும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, மின்சார வாகனங்களின் வடிவம், பயன்பாடு, அதன் தொழில்நுட்ப முன்னேற்றம், அதில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் வடிவமைத்தல் மற்றும் பேட்டரிகளை எவ்வாறு மறுசுழற்சி செய்தல் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாணவர்களும்  எளிய முறையில் கற்று அறிந்திடும் வகையில் ஆய்வுக்கூடத்தை வடிவமைத்து  நிறுவியுள்ளனர்.

மேலும் பல முன்னணி நிறுவனங்களுடன் இனைந்து மின்சார வாகனத் தயாரிப்பு குறித்த ஆய்வை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT