தற்போதைய செய்திகள்

கராச்சி - ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

DIN


கராச்சி:  கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் விரைவு ரயில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் விரைவு ரயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இன்று காலை ரஹீம் யார்கான் அருகே லியாகத்பூரில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீ மலமவென அருகில் உள்ள பெட்டிக்கும் பரவியது.

காலை உணவு சமைப்பதற்காக எரிவாயு சிலிண்டரை திறந்த போது சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த தீ ரயிலின் 3 பெட்டிகளில் முழுவதுமாக பரவியது. இதனால் அலறி அடித்த பயணிகளில் தீ விபத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து உள்ளனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்ரகள் தீயை கட்டுப்படுத்தி விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த கோர தீ விபத்தில் முதல் 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது 46 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரயில் தீ விபத்து குறித்து பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரயிலில் சமையல் பணியாளர்கள் சமையல் செய்து கொண்டிருந்தபோது இரு சமையல் எரிவாயு உருளை வெடித்துள்ளது என கூறினார்.

மீட்புப் பிரிவின் தலைவர் பகீர் ஹுசைன் கூறுகையில், பெரும்பாலான உயிரிழப்புகள் ரயிலில் இருந்து குதித்ததால் நிகழ்ந்துள்ளன. உயிரிழப்பு  மேலும் அதிகரிக்கக் கூடும் என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து பிரதமர் இம்ரான் கான் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் நடந்த விபத்தில் 11 பேரும், செப்டம்பர் மாதம் நடந்த மற்றொரு விபத்தில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT