தற்போதைய செய்திகள்

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதுபாட்டில்கள் திருட்டு

DIN

திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5.92 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் சத்திரம் தெருவில் மதுபான கூடத்துடன் கொரிய அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மதுபான பாட்டில்களை திருடிச் சென்றனர். கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் டாஸ்மாக் அலுவலர்கள் திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், டாஸ்மாக் மதுக்கடை அதிகாரிகள் மற்றும் கடை கண்காணிப்பாளா் ஆகியோருடன் இணைந்து திருடு போன மதுப்பாட்டில்களை கணக்கிட்டனா். அதில், ரூ. 5.94 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடுபோனது தெரியவந்தது. 

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT