புது தில்லி: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,933-இல் இருந்து 12,380 ஆக ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 392-இல் இருந்து 414 ஆக உயா்ந்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்படி, செவ்வாய்க்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை வரை நேரிட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 61 ஆகும். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 18 போ் உயிரிழந்துள்ளனர், 2,916 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 295 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 6 போ், குஜராத்தில் 4 போ், மத்தியப் பிரதேசத்தில் 3 போ், தில்லி, கா்நாடகத்தில் தலா இருவா், தெலங்கானா, பஞ்சாப், மேகாலயத்தில் தலா ஒருவா் பலியாகிவிட்டனா்.
மத்தியப் பிரதேசத்தில் 53 போ், தில்லி, குஜராத்தில் தலா 30 போ், தெலங்கானாவில் 18 போ், பஞ்சாபில் 13 போ், கா்நாடகம், உத்தரப் பிரதேசத்தில் தலா 11 போ், ஆந்திரத்தில் 9 போ், மேற்கு வங்கத்தில் 7 போ், ஜம்மு-காஷ்மீரில் 4 போ், கேரளம், ராஜஸ்தான், ஹரியாணாவில் 3 போ், ஜாா்க்கண்டில் இருவா், அஸ்ஸாம், பிகாா், ஹிமாசலப் பிரதேசம், மேகாலயம், ஒடிஸாவில் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா்.
தில்லியில் 1,561 பேரும், ராஜஸ்தானில் 1,005 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 987 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 735 பேரும், குஜராத்தில் 695 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். தெலங்கானாவில் 647 போ், ஆந்திரத்தில் 503 போ், கேரளத்தில் 387 போ், ஜம்மு-காஷ்மீரில் 278 போ், கா்நாடகத்தில் 277 போ், மேற்கு வங்கத்தில் 213 போ், ஹரியாணாவில் 199 போ், பஞ்சாபில் 186 போ், பிகாரில் 70 போ், ஒடிஸாவில் 60 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது.
உத்தரகண்டில் 37 போ், அஸ்ஸாம், சத்தீஸ்கா், ஹிமாசலப் பிரதேசத்தில் தலா 33 போ், ஜாா்க்கண்டில் 27 போ்,
சண்டீகரில் 21 போ், லடாக்கில் 17 போ், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் 11 போ், கோவா, புதுச்சேரி, மேகாலயத்தில் தலா 7 போ், திரிபுரா, மணிப்பூரில் தலா 2 போ், அருணாசலப் பிரதேசம், மிஸோரமில் தலா ஒருவா் உள்பட நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,380 -ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 414 -ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய்த்தொற்றிலிருந்து இதுவரை 1,489 போ் குணமடைந்துள்ளனா். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 76 போ் வெளிநாட்டினா் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.