தற்போதைய செய்திகள்

அருப்புக்கோட்டையில் போக்குவரத்து நெருக்கடி: இருசக்கர வாகனங்களில் கிராமத்தினர் படையெடுப்பு

DIN

அருப்புக்கோட்டை:  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து இருசக்கர வாகனங்களில் கிராமத்தினர் அதிக அளவில் வருகை தருவதால் அருப்புக்கோட்டை நகருக்குள் சந்தைக்கடைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் அதிகம் பேர் ஒரே இடத்தில் கூடுவதால் தொற்றுப் பரவல்  அச்சம் ஏற்பட்டுள்ளது. 

ஆகஸ்ட் 31 வரையிலான பொது ஊரடங்கில், தமிழக அரசு  பேருந்து போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளது. இக்காரணத்தால் அருப்புக்கோட்டை சுற்றுவட்ட கிராமங்களிலிருந்து  நகருக்கு இருசக்கர வாகனங்களில் பொதுமக்களின் வரத்து கட்டுக்கடங்காத அளவிற்கு அதிகரித்துள்ளது.

அருபபுக்கோட்டை நகரின் முக்கியச் சந்சதைக்கடைகளான சத்தியமூர்த்தி பஜார்,காசுக்கடை பஜார்,புதுக்கடை பஜார், நாடார் பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பூக்கடைச் சந்தைகளுக்கு இவ்விதமாக அதிகளவில் வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்த இடம் போதாததால் அனைவரும் சாலையோரங்களில் சில கிலோ மீட்டர்  தூரத்திற்கு இருசக்கர வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இதுபோக கடைகளுக்கு சரக்குகளை  வழங்கும் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களும் சரக்கு வாகனங்களையும் சாலையோரங்களில் நிறுத்திவிடுகின்றனர். இதனால் நகருக்குள் போக்குவரத்து சிக்கலைத் தீர்க்க வழி தெரியாமல் காவலர்கள் திணறுகின்றனர். அதேசமயம் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கரோனா தொற்று அச்சமும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனெவே இச்சூழலில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் உரிய  நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

மக்களவை தேர்தல்: தபால் ஓட்டு போட்ட மூத்த அரசியல் தலைவர்கள்

SCROLL FOR NEXT