தற்போதைய செய்திகள்

மானாமதுரை ஸ்ரீ வீர அழகர் கோவிலில் ஆடிப் பிரமோற்சவ விழா நிறைவு

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஸ்ரீ வீர அழகர் கோவிலில் நடைபெற்று வந்த ஆடிப் பிரமோற்சவ விழா தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது. 

சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட வீர அழகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா, ஆடிப் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கரோனா தொற்று பரவல் பிரச்சனை காரணமாக சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆடிப் பிரமோற்ச விழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால்  விழா நாள்களில் சுவாமிக்கு நடைபெறும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம்  வீர அழகர் கோவிலில் ஆடிப் பிரமோற்ச விழா தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவர் சுந்தரராஜப் பெருமாளுக்கும் உற்சவர் வீர அழகருக்கும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த சனிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடந்தது. அதைத்தொடர்ந்து ஆடிப் பெளர்ணமி நாளில் நடத்த வேண்டிய மின்விளக்கு ரதம் புறப்பாடு நடத்தப்படாமல் சுவாமி புறப்பாடு மட்டும் நடத்தப்பட்டது. 

இதையொட்டி உற்சவர் வீர அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவில்  முன்மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வெளிப்பிரகாரத்தில் அழகர் புறப்பாடாகி வந்தார். தொடர்ந்து 11 நாள்கள் நடைபெற்று வந்த வீர அழகர் கோவில் ஆடிப் பிரமோற்சவ விழா தீர்த்தவாரி உற்சவத்துடன் நிறைவடைந்தது. திருவிழா நாள்களில் தரிசனத்துக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT